நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், தமிழில் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் 'பாவக்கதைகள்' ஆந்தாலஜி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டைப் பெற்றார்.
இவர் தற்போது இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின், யு1 ரெக்கார்ட்ஸ் மூலம் தயாரித்துள்ள தப்பு பண்ணிட்டேன் என்ற இசை ஆல்பத்தில் நடித்துள்ளார்.
காளிதாஸ், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ள இப்பாடலுக்கு ஏகே ப்ரியன் இசையமைத்துள்ளார். இப்பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.
இந்த நிலையில் அண்மையில் நடிகர் சிம்புவை சந்தித்த காளிதாஸ் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் காளிதாஸுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:தி எம்பயர்: பிரமிக்க வைக்கும் உலகம்!