'சொல்லுங்க அண்ணே சொல்லுங்க' என்றவுடன் நம் நினைவுக்கு வருவது நடிகர் இமான் அண்ணாச்சி. ஒரு சில படங்களில் நடித்தாலும் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். இமான் அண்ணாச்சி சென்னை அரும்பாக்கம் வெங்கடகிருஷ்ணன் தெருவில் வசித்து வருகிறார். புனித வெள்ளி அன்று அவரது வீட்டு பீரோவில் வைத்திருந்த 42 சவரன் நகை காணாமல் போனது.
'ஏலே திருடனை பாத்தீகளா' - இமான் அண்ணாச்சி புலம்பல் - actor iman annachi
சென்னை: பிரபல காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் 42 சவரன் நகை காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டின் கதவு உடைக்கப்படவில்லை. பீரோ உடைக்கப்படவில்லை. ஆனால், நகை மட்டும் காணாமல் போயுள்ளது என்பது இமான் அண்ணாச்சியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து, அரும்பாக்கம் காவல் நிலையத்தில் இமான் அண்ணாச்சி புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து இமான் அண்ணாச்சி கூறுகையில் 'புனித வெள்ளி அன்று நான் அணிந்திருந்த பிரேஸ்லெட், தங்க சங்கிலிகள் மற்றும் தங்க கைக்கடிகாரம் ஆகியவற்றை பர்சில் வைத்து பீரோவில் பூட்டி அதன் சாவியை நான் தான் வைத்து இருந்தேன். இவற்றின் மொத்த மதிப்பு 42 சவரன்.
இந்த நிலையில் அன்று மாலை எனது நண்பரைப் பார்ப்பதற்காக வெளியே சென்று விட்டேன். அதன் பிறகு அடுத்தடுத்த நாட்களில் படப்பிடிப்பின் காரணமாக பிஸியாக இருந்ததால் நகையை பார்க்காமல் விட்டுவிட்டேன். நேற்று பீரோவைத் திறந்து பார்த்தபோது நகை இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். வீட்டில் அனைவருமே இருந்தனர். நான் யார் மீது சந்தேகப்படுவது? அப்படி யார் மீதாவது சந்தேகப்பட்டால் அது பெரிய தவறு. இதனால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.