நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கும் படம் 'தனுசு ராசி நேயர்களே'. இப்படத்தில் ஆட்டோமொபைல் மெக்கானிக்காக வரும் ஹரீஷுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ரியா சக்ரபோர்த்தி நடிக்கிறார். ரியா உள்பட இன்னும் மூன்று நடிகைகள் படத்தில் இடம்பெறுகின்றனர்.
'தனுசு ராசி நேயர்களே' இவங்கள கட்டினால் வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்...
ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள 'தனுசு ராசி நேயர்களே' படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் ஹரீஷ் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கையுள்ள நபராக நடிக்கிறார். தனுசுராசிக்காரரான இவருக்கு கன்னி ராசி பெண்ணை கல்யாணம் செய்தால் நல்லது என ஜோதிடர் கூறவே இவரும் கன்னி ராசி உள்ள பெண்ணைத் தேடி அலைகிறார். அப்போது ஏற்படும் நிகழ்வுகளை நகைச்சுவை உணர்வுடன் படமாக்கியுள்ளனர்.
ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ கோகுலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இதனையடுத்து தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.