தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிவராத்திரி: குடும்பத்தினருடன் தனுஷ் குலதெய்வ வழிபாடு! - குலதெய்வ கோயிலில் தனுஷ் வழிபாடு

மகா சிவராத்திரியை முன்னிட்டு குடும்பத்தினருடன் சொந்த ஊரில் குலதெய்வ வழிபாடு நடத்தியுள்ளார் நடிகர் தனுஷ்.

Dhanush at his hometown with family
Dhanush worshipped his ancestral temple

By

Published : Feb 22, 2020, 2:18 PM IST

Updated : Feb 22, 2020, 2:24 PM IST

தேனி: மகா சிவராத்திரியை முன்னிட்டு தேனியில் உள்ள தனது குலதெய்வ கோயிலில் குடும்பத்துடன் சாமி வழிபாடு செய்துள்ளார் நடிகர் தனுஷ்.

ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி நாடு முழுவதும் நேற்று இரவு கொண்டாடப்பட்டது. இந்த நாளில் குலதெய்வ கோயில்களிலும் இரவு முழுவதும் கண்விழித்து பக்தர்கள் வழிபாடு நடத்துவதுண்டு. இதையடுத்து நடிகர் தனுஷ் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள தனது குலதெய்வ கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்செய்தார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள முத்துரெங்கபுரம் கிராமத்தில் அமைந்திருக்கும் கஸ்தூரிமங்கம்மாள் கோயிலே நடிகர் தனுஷின் குலதெய்வமாகும்.

Dhanush worshipping with his family

மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு தனது மனைவி ஐஸ்வர்யா தனுஷ், இயக்குநரும், தந்தையுமான கஸ்தூரிராஜா, தாய் விஜயலட்சுமி கஸ்தூரிராஜா, தனது இரு மகன்களோடு வருகைதந்திருந்தார் தனுஷ். அவரது வருகையை முன்னரே அறிந்த ரசிகர்கள் அந்தப் பகுதியில் சூழ்ந்துகொண்டு மொபைலில் புகைப்படம் எடுத்தனர்.

Dhanush posing for fans

இதையடுத்து அவர்களை நோக்கி கையசைத்த தனுஷ், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

Dhanush Waved hand towards fans

ரசிகர்கள் கூட்டத்துக்கு இடையே தங்களது குலதெய்வமான கஸ்தூரிமங்கம்மாள் சாமியை குடும்பத்தினருடன் வழிபட்டுச் சென்றார் தனுஷ்.

Dhanush withhis family

தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்துவருகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள ஜகமே தந்திரம் வரும் மார்ச் மாதம் வெளியாகவுள்ள நிலையில், அதன் இறுதிக்கட்ட பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார்.

Last Updated : Feb 22, 2020, 2:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details