2019-2020ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் இன்று தொடங்கியது. இம்மாதம் தொடங்கியுள்ள தேர்வு இம்மாதம் 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வை ஏழாயிரத்து 276 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து எட்டு லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அதேபோல 19 ஆயிரத்து 166 தனித்தேர்வர்களும் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.
பொதுத்தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து - பொதுதேர்வு
நடிகர் தனுஷ் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
பொதுதேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ்
இந்நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுவருகின்றனர். அந்த வகையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் ஒன்று பதிவுசெய்துள்ளார். அதில், ”பொதுத்தேர்வுகள் எழுதும் அனைத்து மாணவர்களும் சிறப்பாக எழுத வாழ்த்துகள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ரோஜா வனம் நிகழ்வின் மூலம் குஷ்பூ மூவருக்கு “சவால்“ விடுத்துள்ளார்!