கோலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட், பாலிவுட்டில் நடிகர் தனுஷ் கலக்கிவருகிறார். பாலிவுட்டில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள, 'அட்ராங்கி ரே' படம் நாளை (டிசம்பர் 24) டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் திரைப்படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இப்படம் உருவாகிறது.
இப்படத்தின் டைட்டில் லுக்கை தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 'வாத்தி' என்று தமிழிலும், 'சார்' எனத் தெலுங்கிலும் படத்திற்குத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வியை அடிப்படையாக வைத்து படம் உருவாவதுபோல் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' படத்தில் வாத்தி ரெய்டு பாடல் இடம் பெற்றிருந்தது. அது மட்டுமல்லாமல் படத்தில் அவரை வாத்தி என அழைத்தனர். அதனால் விஜய்யைத் தொடர்ந்து இரண்டாவது வாத்தியாக கோலிவுட்டில் தனுஷ் உருவெடுத்துள்ளார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க:Vikram Update: அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் 'விக்ரம்'?