நடிகர் தனுஷை வைத்து 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் தற்போது மீண்டும் நான்காவது முறையாக தனுஷுடன் கூட்டணி வைத்துள்ளார்.
திருச்சிற்றம்பலம் படப்பிடிப்பு பூஜை தனுஷின் 44ஆவது படமான இதற்கு 'திருச்சிற்றம்பலம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
படத்தில் தனுஷுடன் நடிகைகள் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆக.5) பூஜையுடன் ஆரம்பமானது. இந்தப் பூஜையில், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், தனுஷ், நடிகை நித்யா மேனன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். பூஜையில் தனுஷ் வேஷ்டி சட்டையுடன் கலந்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலானது.
இதையும் படிங்க: தெலுங்கில் அடுத்தடுத்து கமிட்டான தனுஷ்