தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

படப்பிடிப்பின்போது ஆர்யாவிற்கு காயம்! - நடிகர் ஆர்யாவுக்கு காயம் செய்திகள்

‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின்போது, நடிகர் ஆர்யாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

படப்பிடிப்பின் போது ஆர்யாவிற்கு காயம்!
படப்பிடிப்பின் போது ஆர்யாவிற்கு காயம்!

By

Published : Dec 29, 2020, 10:04 AM IST

‘அரிமா நம்பி’, இருமுகன்’, நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆனந்த் சங்கர். இவர் தற்போது விஷால், ஆர்யாவை வைத்து ‘எனிமி’ படத்தை எடுத்துவருகிறார். மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ். வினோத்குமார் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக மிருணாலினி ரவி நடிக்கிறார். தமன் இசையமைக்க ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஈவிபி பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செட்டில் நடைபெற்றுவருகிறது. விஷாலுக்கும் ஆர்யாவுக்கும் இடையே நடக்கும் சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் ரவிவர்மா டூப் இல்லாமல் எடுத்துவந்தார்.

இந்நிலையில் படப்பிடிப்பின்போது, ஆர்யாவிற்கு கையில் பலத்த அடிபட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயத்திற்கு சிகிச்சைக்கு பெற்று மீண்டும் படப்பிடிப்பில் ஆர்யா கலந்துகொண்டார்.

இதையும் படிங்க...பாலிவுட் இன்ஸ்டா ஸ்டோரி - மலைக்காவின் பிகினி தரிசனத்தை கேமராவில் கிளிக்கிய அர்ஜுன் கபூர்

ABOUT THE AUTHOR

...view details