தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் கதையுடன் களம் இறங்கும் 'குற்றம் 23' ஜோடி - அருண் விஜய்யின் புதியபடம்

தமிழ்த்திரையுலகில் இதுவரை வெளிவராத புதுமையான ஒரு ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் கதையுடன் அருண் விஜயை வைத்து இயக்குநர் அறிவழகன் புதிய படத்தை இயக்கவுள்ளார்.

arun vijay
arun vijay

By

Published : Dec 6, 2019, 8:42 AM IST

'குற்றம் 23' படத்தையடுத்து இயக்குநர் அறிவழகன் - அருண் விஜய் கூட்டணி மீண்டும் ஒரு படத்தின் மூலம் இணைய உள்ளது. அருண் விஜயை வைத்து இம்முறை அறிவழகன் ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் பூஜையுடன் தொடங்கவுள்ளது.

இதுகுறித்து அறிவழகன் கூறுகையில், 'குற்றம் 23' படத்துக்குப்பிறகு அருண் விஜயை வைத்து இயக்க இருப்பதில் பெரும் மகிழ்ச்சி. தமிழ் திரையுலகில் இதுவரை வெளிவராத புதுமையான ஒரு ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் கதை. எனது முந்தைய படங்களைவிட இதில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம். கண்டிப்பாக அது பேசப்படும். இந்த படத்தில் நயாகியாக ரெஜினா நடிக்கவுள்ளார்.

இயக்குநர் அறிவழகன்

ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார். இவர் 'ஆர்யா 2', 'ஆரஞ்ச்' உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் பணிபுரிந்தவர். சாம் சி.எஸ் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது. சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக இந்தப் படத்தை வெளியிடப்பட உள்ளது என்றார்.

ABOUT THE AUTHOR

...view details