தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அக்ஷய் குமார் தாயார் காலமானார்! - அருணா பாட்டியா

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தாயார் அருணா பாட்டியா காலமானார்.

Akshay Kumar
Akshay Kumar

By

Published : Sep 8, 2021, 10:37 AM IST

மும்பை : தனது தாயார் இறப்பெய்தியதை நடிகர் அக்ஷய் குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அக்ஷய் குமாரின் தாயார் அருணா பாட்டியா. இவருக்கு அண்மையில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அக்ஷய் குமார் லண்டனில் இருந்து இந்தியா திரும்பினார்.

அக்ஷய் குமாரின் தாயாருக்கு மும்பையில் உள்ள ஹிராநந்தானி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் அவர் இன்று (செப்.8) காலமானார்.

தாங்க முடியாத துயர்..

இது குறித்து அக்ஷய் குமார் ட்விட்டரில், “அவள் என் இதயம். நான் சொல்லொண்ணா துயரில் தாங்க முடியாத வேதனையில் தவிக்கிறேன். என் அம்மா அருணா பாட்டியா இன்று காலை அமைதியாக இந்த உலகை விட்டு பிரிந்தார். அவர் என் தந்தை உலகில் இணைந்துவிட்டார். உங்களின் பிரார்த்தனைகளை மதிக்கிறேன். ஓம் சாந்தி” எனப் பதிவிட்டுள்ளார்.

அக்ஷய் குமார் சிண்டெர்லா படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றிருந்தார். அங்கிருந்து திங்கள்கிழமை (செப்.6) நாடு திரும்பினார். தொடர்ந்து தனது தாயாரின் உடல்நிலை குறித்து ட்விட்டரில் தகவல் தெரிவித்துவந்தார்.

இதையும் படிங்க : கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்

ABOUT THE AUTHOR

...view details