ரவுடி பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் படம் நெற்றிக்கண். மிலிந்த் ராவ் எழுதி, இயக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரித்தில் நடிகர் அஜ்மல் இணைந்துள்ளார்.
ரௌத்திரம் மிக்க இளைஞனாக அஞ்சாதே, ஸ்டைலீஷ் கம் புத்திசாலி வில்லனாக இரவுக்கு ஆயிரம் கண்கள் என தான் நடிக்கும் அனைத்து படங்களிலும், வித்தியாச நடிப்பை தந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார் அஜ்மல். இதையடுத்து, நயன்தாராவின் 'நெற்றிக்கண்' படத்தில் மிக முக்கியமாக கதாப்பாத்திரத்தில் தோன்றவுள்ளாராம்.
மர்மங்கள் நிறைந்த, பலவித திருப்பங்கள் கொண்ட திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் பெரும் திருப்பம் ஏற்படுத்தும் விதமான பெரும் கதாபாத்திரத்தில் அஜ்மல் நடிக்கிறார்.