அஜித் - ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள இதில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, யோகி பாபு, கார்த்திகேயா, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட நடித்துள்ளனர். வலிமைக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அதன்படி வலிமை திரைப்படம் வரும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வரும் 13ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது. வலிமை திரைப்படம் வெளியாக இன்னும் ஒருவாரம் மட்டுமே இருக்கும் நிலையில் ரசிகர்கள் இதைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.
வலிமை திரைப்படம் கிட்டத்தட்ட 2 மணிநேரம் 58 நிமிடங்கள் எனக் கிட்டத்தட்ட 3 மணிநேரப் படமாக உருவாகியுள்ளது.
இதையும் படிங்க:Valimai Update: 'வலிமை' விசில் தீம் மியூசிக் வெளியீடு!