தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிறிய தயாரிப்பாளர்கள் சினிமாவை புரிந்துகொள்ள வேண்டும் - நடிகர் ஆரி

சிறிய தயாரிப்பாளர்கள் சினிமாவைப் புரிந்துகொண்டு படத்தைத் தயாரிக்க வர வேண்டும் என நடிகர் ஆரி வேண்டுகோள்விடுத்துள்ளார்.

ஆரி
ஆரி

By

Published : Dec 2, 2021, 11:52 AM IST

ஸ்ரீமணி இயக்கத்தில் ராஜேந்திர பிரசாத், சுந்தர். ஜி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'கண்மணி பாப்பா'. இதில் தமன் குமார், மியாஸ்ரீ, சிறுமி மானஸ்வி, சிங்கம் புலி, சிவம், சந்தோஷ் சரவணன், நாக மாசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (டிசம்பர் 2) நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஆரி, அசோக், ஈரோடு மகேஷ், தயாரிப்பாளர்கள் கே. ராஜன், சி.வி. குமார் உள்ளிட்ட பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நடிகர் ஆரி கூறுகையில், "ஒவ்வொரு விழாவிற்கும் ஒரு நல்ல தொடக்கம் இருக்கும். இந்த விழாவில் முதலில் தயாரிப்பாளரை அழைத்து நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள், அது நல்ல ஆரம்பம். ஏனென்றால் தயாரிப்பாளர்தான் எல்லாம். சிறிய படங்கள் விழா என்றால் உடனடியாக வருவேன்.

பிக்பாஸுக்குப் பிறகு கலந்துகொள்ளும் முதல் ஆடியோ விழா இது. இப்படத்தின் ஹீரோ தமன்தான் நான் இங்கு வரக் காரணம். நம் தமிழ் சினிமாவுக்கு ஜெய்பீம் ஒரு முக்கியமான படம். அதேபோல் கண்மணி பாப்பா படமும் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

படத்தைப் பார்த்தவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சொல்வது சந்தோசமாக இருக்கிறது. மானஸ்வி குழந்தையை நிறையப் படங்களில் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. சிறிய தயாரிப்பாளர்கள் சினிமாவைப் புரிந்துகொண்டு தயாரிக்க வர வேண்டும். ஓடிடி எல்லாப் படங்களையும் வாங்குவதில்லை.

கண்மணி பாப்பா படக்குழு

இந்தப் படத்தைப் பொறுத்தவரைத் தயாரிப்பாளர் நல்ல லாபத்திற்கு வியாபாரம் செய்திருக்கிறார், அது பெரிய சந்தோஷம். சாய்தேவ் பின்னணி இசையில் நன்றாக வேலை செய்திருக்கிறார். தமனும், நானும் ஒரே பிரச்சினையைச் சந்தித்தவர்கள். தமனுக்கு மிகப்பெரிய ஓபனிங் இருக்கு. 2022ஆம் ஆண்டு எல்லாருக்கும் நல்லதாக அமைய வேண்டும்" என்றார்.

நாயகன் ஹீரோ தமன் கூறியதாவது, "இது ஒரு இசையமைப்பாளர் அசம்பிள் செய்த படம். ஸ்ரீமணி சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கலாம் என்று சொன்னார். ஆனால் தயாரிப்பாளர் கதை பிடித்துப்போனதால் பெரிதாகவே பண்ணலாம் என்று சொன்னார். மிகச் சிறப்பான திரைக்கதையோடு வந்திருக்கும் படம் இது.

வழக்கமான பேய் படம் போன்று இப்படம் இருக்காது. இயக்குநர் ஸ்ரீமணி அருமையாக இயக்கியிருக்கிறார். நான் நடித்ததில் இப்படம்தான் பெஸ்ட். இந்தப் படம் நிச்சயமாகப் பெரிய வெற்றிப் படமாக அமையும்" என்றார்.

இதையும் படிங்க:'வீரமே வாகை சூடும்' ரிலீஸ் தேதி அறிவிப்பு; குஷியில் ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details