நடிகர் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இச்செய்தி பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவருடனும் டப்பிங் பணியில் ஈடுபட்ட நடிகர்கள் தற்போது பரிசோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
'ரிசல்ட் நெகட்டிவ்; அதற்கு உங்க பிரார்த்தனைதான் காரணம்' - நன்றி தெரிவித்த அமித் சாத் - அமிதாப்பச்சன்
நடிகர் அபிஷேக் பச்சனுடன் டப்பிங் பணியில் ஈடுபட்டிருந்த அமித் சாத் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்குத் தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு வந்துள்ளது. தனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் ட்வீட் செய்துள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அமித் சாத், அபிஷேக் பச்சனுடன் Breathe: Into The Shadows சீரிஸின் டப்பிங்கில் இணைந்து பணியாற்றியுள்ளார். அதனால் நடிகர் அமித் சாத் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். பரிசோதனை முடிவில் அவருக்குத் தொற்று ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அக்கறைக்கும் நன்றி. எனது பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்று வந்துள்ளது. உங்களின் பிரார்த்தனைதான் இதற்குக் காரணம். லவ் யூ ஆல்" என்று கூறியுள்ளார்.