ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தியா அன்னபூர்ணா கோஷ் இயக்கும் ‘பாப் பிஸ்வாஸ்’ படத்தில் அபிஷேக் பச்சன் நடிக்கிறார். பவுண்ட் ஸ்கிரிப்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஷாருக்கான் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இதுகுறித்து ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாப் பிஸ்வாஸ்: ஷாருக்கான் தயாரிப்பில் அபிஷேக் பச்சன்
ஷாருக்கான் தயாரிப்பில் அபிஷேக் பச்சன் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்.
Abhishek Bachchan
அனுராக் கஷ்யப் இயக்கிய ‘மன்மர்சியான்’ படத்துக்குப் பிறகு எந்த படத்திலும் கமிட்டாகாத அபிஷேக், இந்தப் படத்தை ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷின் இரண்டு படங்கள்