மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன். இவர், தற்போது பாப் பிஸ்வாஸ் படத்தில், கூலிப்படையைச் சேர்ந்தவராக நடித்துவருகிறார்.
இந்நிலையில், அபிஷேக் பச்சனுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
ஆனால், இதனை நடிகர்களோ, மருத்துவமனையோ உறுதி செய்யாதநிலையில், நேற்று மும்பை லீலாவதி மருத்துவமனைக்கு அமிதாப் பச்சனும், அவரது மகள் சுவேதா பச்சன் நந்தாவும் வந்துள்ளனர்.