தமிழ் திரையுலகில் மிகவும் வித்தியாசமாகக் கதைகள் கொண்டு ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் இயக்குநர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம், ’ஆயிரத்தில் ஒருவன்’. படம் வெளியான சமயத்தில் இதைக் கொண்டாடவில்லை என்றாலும், தற்போது இந்த படம் தமிழ் சினிமாவில் மிக முக்கிய படமாக உள்ளது.
இதனையடுத்து ’ஆயிரத்தில் ஒருவன்’ படம் வெளியாகி 10ஆண்டுகளுக்குப் பிறகு, ’ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தின் அப்டேட்டை படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும் இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, படத்தின் படப்பிடிப்பு 2024ஆம் ஆண்டு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.