"மேயாத மான்" படத்திற்கு அடுத்து தனது இரண்டாவது படமாக இயக்கும் "ஆடை" படம் முற்றிலும் மாறுபட்ட கதை என்று கூறியுள்ளார் இயக்குநர் ரத்னகுமார். இரு படத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு, இரண்டிற்கும் எவ்வித ஒற்றுமைகளும் கிடையாது என்றார்.
ஆடை படத்தின் அடுத்த சர்ப்ரைஸ்! - அமலா பால்
நடிகை அமலாபால் நடிப்பில், இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியாகவுள்ள ஆடை படத்தின் அடுத்த சர்ப்ரைஸ் இன்று வெளியாகவுள்ளது.
ஆடை படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார் அமலா பால். அவரை வைத்து தான் இப்படம் நகர்கிறது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத துணிச்சலான செயலை செய்துள்ளார் அமலா பால் என கோலிவுட் ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் இன்று மதியம் ஒரு மணிக்கு வெளியாகிறது. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரவிருக்கிறது ஆடை படக்குழு. படத்தின் ட்ரெய்லரை பாலிவுட் இயக்குநர் அனுராக் கெஷ்யாப் வெளியிடுகிறார்.