'மேயாத மான்' பட இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் அமலா பால், ரம்யா, அருண் பாண்டியன், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடிப்பில் ஜூலை 19 ஆம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் 'ஆடை'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று வடபழனியில் நடைபெற்றது.
'நிர்வாண காட்சியில் நடித்தபோது பாஞ்சாலி போல் உணர்ந்தேன்..!' - அமலா பால் - amala paul
சென்னை: "ஆடை படத்தின் படப்பிடிப்பில் நிர்வாண காட்சிகளில் நடிக்கும்போது நான் பாஞ்சாலி போல உணர்ந்தேன்" என, அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அமலா பால் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
விழாவில் கலந்து கொண்டு பேசிய படத்தின் நாயகி அமலாபால், "திரைத் துறையிலிருந்து வெளியேற போகிறேன் என்று என் மேனேஜரிடம் பல முறை கூறியுள்ளேன். அந்த நேரத்தில் தான் 'ஆடை' கதை பற்றி கேள்விப்பட்டேன். டெல்லி வந்து என்னை சந்தித்து பேசிய இயக்குநர் ரத்னகுமார், 2 மணி நேரம் கதை முழுக்க சொன்னார். இது ஹாலிவுட் படம் ரீமேக் இல்லையே என்று கூட கேட்டேன். எனக்கு கதை மேல் நம்பிக்கை இருந்தது. என்னுடைய ஒன்பது வருட சினிமா பயணத்தில் முதல் முறையாக படப்பிடிப்பு முன்பு ஒரு வாரம் ரிகர்சல் செய்தேன். முதல் முறையாக ஒரு இயக்குநர் என்னிடம் இது போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய வர வேண்டும். பாஞ்சாலிக்கு 5 கணவர்கள், அது போல நான் 15 பேர் முன்பாக நிர்வாண காட்சிகளில் நடிக்கும்போது 'பாஞ்சாலி' போல் என்னை உணர்ந்தேன்" என்றார்.
பேச்சை தொடங்கும்போது நல்ல முறையாக பேசிய அமலாபால், கைதட்டல் வாங்குவதற்காக கடைசி நொடிகளில் 15 பேர் முன்பு நிர்வாண காட்சியில் நடித்தேன் என்று கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.