தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சமத்துவத்தை பேசும் சந்தானத்தின் ‘ஏ1’- சந்தோஷ் நாராயணன் - சந்தானம்

சென்னை: சந்தானத்தின் ‘ஏ1’ திரைப்படம் சர்ச்சை படமல்ல, சமத்துவத்தை பேசும் படம் என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

a1 movie

By

Published : Jul 24, 2019, 11:20 AM IST

சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள ‘ஏ1’ திரைப்படம் ஜுலை 26ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ஜான்சன் கே எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.விழாவில், ஒளிப்பதிவாளர் கோபி, ஸ்டண்ட் மாஸ்டர் ஹரி தினேஷ் , இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் சந்தானம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசுகையில், 'இந்த மேடையில் சந்தானம் இருப்பதால் அனைவரும் ஜாலியாகப் பேச முடியுது. 'சூது கவ்வும்' படத்திற்குப் பிறகு எனக்கு மிகவும் பிடித்த படம் இது. ஈக்குவாலிட்டி பற்றிய படங்கள் வருவது குறைவு. இந்தப் படமும் ஈக்குவாலியிட்டியை ஜாலியாகப் பேசி இருக்கிறது. படத்தின் டீசரை வைத்து சில சர்ச்சைகள் வந்தது. ஆனால் படம் அதற்கு நேர்மாறாக இருக்கும்' என்றார்

ஏ1 பட நாயகி தாரா அலிஸா பெரி

படத்தின் இயக்குநர் ஜான்சன் பேசுகையில், தயாரிப்பாளர் ராஜ் தான் என்னை சந்தானம் சாரிடம் அழைத்துச் சென்றார். சந்தானம் அவரது டீமை கூப்பிட்டு தான் கதைச் சொல்லச் சொன்னார். படபடப்பாக இருந்தது. கதையைக் கேட்டதும் அனைவரும் கை கொடுத்தனர். புதிய கதாநாயகியை தேர்ந்தெடுத்தது எதனால் என்றால் மற்ற நடிகைகளின் டேட் எங்களுக்கு சாதகமாக இல்லை. நீங்கள் படத்தை காசு கொடுத்த நம்பி வந்து பார்க்கலாம். ஹீரோயின் தாராவிடம் நான் பேசியது ஒரு ஐந்து வார்த்தைகள் இருக்கும். ஆனால் நான் அவரிடம் எதிர்பார்த்த வேலையை வாங்கிவிட்டேன் என்றார்.

நடிகர் சந்தானம்

இவர்களை தொடர்ந்து பேசிய சந்தானம், 'தொலைக்காட்சியில் அறிமுகமானேன், இப்போ வரைக்கும் ஓரளவு நான் தாக்குப்பிடிச்சுப் போகுறேன்னா அதுக்கு காரணம் என் டீம்தான். அவர்கள் இல்லன்னா நான் இல்லை. என் டீமில் இருந்த ஜான்சன் இப்போ டைரக்டராகி இருக்கார். ராஜ் தயாரிப்பாளராக மாறிவிட்டார். ஜான்சன் பயங்கர ஷார்ப்பு. வியாசர்பாடில பிறந்து வளர்ந்த ஆளு. அங்க உள்ள கதையை தான் படமாக்கி இருக்கார். இது சூது கவ்வும் பேட்டன்ல ஒரு படம். எனக்கு இந்தப்படம் ரொம்ப புதுசு' என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details