தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'இந்தி மொழி கட்டாயமில்லை; அழகிய தீர்வு' - ஏ.ஆர்.ரஹ்மான் 'நச்' ட்விட்! - மரியான்

இந்தி பேசாத மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் இல்லை என்று வரைவு திருத்தம் செய்யப்பட்டுள்ளதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வரவேற்று பதிவிட்டுள்ளார்.

File pic

By

Published : Jun 3, 2019, 3:54 PM IST

Updated : Jun 3, 2019, 9:45 PM IST

கஸ்தூரி ரங்கன் தலைமையிலான தேசிய கல்விக் கொள்கைக் குழுவின் பரிந்துரையின்படி மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில், இந்தி அல்லாத மாநிலங்களில் இந்தி மொழி மூன்றாவது மொழியாக கற்பிக்கப்பட வேண்டும் என்று வரைவு அறிக்கையை மத்திய அரசு ஜுன் 1ஆம் தேதி வெளியிட்டது.

இந்நிலையில் இன்று (ஜூன் 3) மத்திய அரசு தனது கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையில் திருத்தம் செய்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி அல்லாத மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் மூன்று பாடங்களை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். முன்னதாக இந்தி மொழியை படிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்த நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், “அழகிய தீர்வு. தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல. திருத்தப்பட்டது வரைவு!” என்று கூறியுள்ளார்.

இந்தி மொழியைக் கட்டாயாமாக்கவேண்டும் என்று மத்திய அரசு வரைவு கொண்டுவந்த போது ஏ.ஆர். ரஹ்மான் பஞ்சாபிலும் தமிழ் பரவுவதாக மரியான் படப் பாடலை பஞ்சாபி ஒருவர் பாடும் வீடியோவை பதிவிட்டு ட்விட் செய்தது குறிப்பிட்டத்தக்கது.

Last Updated : Jun 3, 2019, 9:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details