பாரமவுன்ட் பிக்சர்ஸ் சார்பில் 'எ குவய்ட் ப்லேஸ்-2' (Quiet Place: Part II) படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.
2018ஆம் ஆண்டு வெளியாகி ப்ளாக் பஸ்டர் படமாக உருவெடுத்த 'எ குவய்ட் ப்லேஸ்' படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. இப்படம் முழு நீள திகில் படமாக வெளியாகவுள்ளது.
இயக்குநர் ஜான் க்ரேசின்ஸ்கி இயக்கத்தில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தில் பார்வையில்லாத வேற்று கிரக உயிரினங்கள் பீதியை கிளப்புகின்றன. பார்வையில்லை என்றாலும் அபரிமிதமான கேட்கும் திறன் கொண்ட இந்த உயிரினங்கள் சப்தமிடுகிற எதையும் கண்ணாபிண்ணாவென்று அடித்துக் கொல்லுகின்றன. இவைகளிடமிருந்து படத்தின் கதாநாயகியும் அவரது குழந்தைகளும் தப்பிக்கும் காட்சிகள் இரண்டு நிமிடம் நீளுகிற ட்ரெய்லரில் இடம்பெறுகின்றன.
இதையும் படிங்க: கேப் விடாமல் காதலியை இம்ப்ரெஸ் செய்யும் 'டைட்டானிக்' நாயகன்!