தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக திகழ்பவர் எஸ்.ஏ.சந்திரசேகர். தமிழ் சினிமாவில் புரட்சி இயக்குநர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திரசேகர் இயக்கும் 70ஆவது படமான 'கேப்மாரி' படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். ஜெய்க்கு இந்தப்படம் 25ஆவது படமாகும். இப்படத்தில் வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி இருவரும் நாயகிகளாக நடிக்க சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர்ஸ்டார் சீனிவாசன், சித்தார்த் விபின் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
50 மும்பை அழகிகளுடன் நடனம் ஆடும் நடிகர் ஜெய்! - dance
எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடித்து வரும் 'கேப்மாரி' படத்தில் 50 அழகிகளுடன் ஜெய் நடனமாடும் பாடல் காட்சிக்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டது.
சந்திரசேகரின் சினிமா வாழ்க்கையில் கடைசிப்படம் என்பதால் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப்படம் காதல், நகைச்சுவை, இளமை குறும்புகளுடன் உருவாகிறது. இந்நிலையில், எம்ஜிஆர் பிலிம் சிட்டியில் பிரமாண்டமான அரங்கம் வடிவமைக்கப்பட்டு அதிரடியான பாடல் காட்சி படமாக்கப்பட்டது. 'என் காதல் ராணி என்னை தூக்கி வீசிட்டா' என்ற பாடலை ஹரிசரண் பாடியுள்ளார். பிரமாண்ட செட்டில் 50க்கும் மேற்பட்ட மும்பை அழகிகளுடன் ஜெய் நடனமாடினார்.
அட போட வைக்கும் கலக்கல் நடனத்துடன் கலர் புல்லாக படமாக்கப்பட்டது. தெறி, பேட்டை ஆகிய படங்களுக்கு நடனம் அமைத்த ஷெரீப்ஃ இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.