தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 15, 2020, 10:14 PM IST

ETV Bharat / sitara

இளம் இயக்குநர் மறைவு; ஷங்கரும் ஜிவி பிரகாஷூம் ட்விட்டரில் இரங்கல்

சாலை விபத்தில் உயிரிழந்த இளம் இயக்குநர் அருண் பிரசாத்துக்கு இயக்குநர் ஷங்கரும் நடிகர் ஜிவி பிரகாஷூம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

arun
arun

விக்ரமின் 'ஐ' படத்தில் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர், அருண் பிரசாத். இவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை வைத்து '4 G' என்ற படத்தை வெங்கட் பாக்கர் என்ற பெயரில் இயக்கியிருந்தார். சிவி குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜிவி பிரகாஷே இசையமைத்து இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகளில் உள்ளன.

ஊரடங்கு காரணமாக, அருண் பிரசாத் அன்னூரில் இருக்கும் தனது வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் இன்று (மே 15) காலை மேட்டுப்பாளையம் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மேட்டுப்பாளையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அருண் பிரசாத் உயிரிழந்தார். இவரின் இந்த மறைவு '4 G' படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவரின் மறைவு குறித்து ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "என்னுடைய முன்னாள் உதவியாளரும் இளம் இயக்குநருமான அருணின் திடீர் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் எப்போதும் இனிமையானவர், நேர்மறையானவர். கடின உழைப்பாளி. உங்களுக்காக எப்போதும் பிரார்த்தனை செய்வேன். உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.

நடிகர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "எப்போதும் நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் ஒரு இனிய சகோதரன். என் இயக்குநர் வெங்கட் பாக்கர் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்... அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்... நண்பரின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும்" என ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: 'என்னது நான் கைது செய்யப்பட்டேனா?' - பூனம் பாண்டே விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details