தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வெற்றிநடைப்போடும் ’4 Sorry’ - மகிழ்ச்சி தெரிவித்த இயக்குநர்! - 4 சாரி திரைப்படம்

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ’4 Sorry’ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.

4 sorry film
4 sorry film

By

Published : Nov 1, 2021, 10:36 AM IST

ஜான் விஜய், காளி வெங்கட், டேனியல், ரித்திகா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் '4 Sorry'. இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நான்கு வித்தியாசமான கதைகளுடன், வாழ்க்கையில் தவறு செய்யும்போது அதை உணர்ந்து எப்படி சாரி கேட்கிறோம் என்பதுதான் இப்படத்தின் அடிநாதம்.

இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில், சேப்டி ட்ரீம் புரொடக்ஷன் ஸ்டூடியோ வழங்கும் இந்தத் திரைப்படம் செந்தில் பிரபு, சக்திவேல், ஜெகநாரயணன், கார்த்திக் அசோகன் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகி உள்ளது.

இந்தப்படத்துக்கு ரசிகர்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், படத்தை இயக்கிய சக்திவேல் படம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

”டேனியல் நடித்த முதல் கதையில் தேவையில்லாத விஷயத்தில் சிக்கிக்கொள்ளும்போது அதனால் ஏற்படும் நிகழ்வுகள் முழுக்க முழுக்க காமெடியாகக் கூறப்பட்டுள்ளது. சாக்ஷி அகர்வால், கார்த்திக் நடித்துள்ள கதையில் நிச்சயதார்த்தம் அன்று அவர்களிடையே ஒரு பிரச்சனை முளைக்கிறது.

அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கிராண்டியர் மேக்கிங்கிலும், காளி வெங்கட், ரித்விகா நடித்த மூன்றாவது கதையில் நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தும் அவர்களுக்கு அச்சுறுத்தறுத்தலாக இருக்கும் மனிதனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதையும், ஜான் விஜய் - சஹானா நடித்துள்ள நான்காவது கதையில் ‘எங்கேயும் எப்போதும்’ போல் சுவாரஸ்யமான பஸ் பயணக் கதையையும் சொல்லியுள்ளோம்.

இந்த வித்தியாசமான கதைக்களத்துக்கு தியேட்டரில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பு கொடுக்க வேண்டும். மீண்டும் உங்களை ஒரு புதிய முயற்சியில் சந்திக்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க:வீடு திரும்பும் நடிகர் ரஜினிகாந்த்?

ABOUT THE AUTHOR

...view details