அமராவதி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் அஜித். தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்.
‘தீனா’ படத்துக்கு பிறகு ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என அழைக்கப்பட்டார். அதன்பிறகு பல்வேறு வெற்றி தோல்விகளை சந்தித்தாலும், திரைத்துறையில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
29 Years Of Ajithism என்ற ஹேஷ்டேக்கில் அஜித்தின் திரைப்பயணத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மலேசிய அஜித் ரசிகர்கள் இதற்காக பொதுவான டிபி ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆகஸ்ட் 3ஆம் தேதி வலிமை அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:மூன்று படங்கள்; 1,000 கோடி ரூபாய் பட்ஜெட் - வசூல் சாதனை படைப்பாரா பிரபாஸ்