தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

17ஆவது சென்னை திரைப்பட விழா போஸ்டர் வெளியீடு - 17th CIFF

சென்னை: உலக சினிமா, போட்டியில் பங்குபெறும் தமிழ்ப்படங்கள், குறிப்பிட்ட நாடுகளின் சிறந்த படங்கள், குறிப்பிட்ட இயக்குநர்களின் முந்தைய சாதனை படங்கள் ஆகிய பிரிவுகளில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் சென்னை திரைப்படவிழாவில் படங்கள் திரையிடப்படவுள்ளன.

17வது சென்னை திரைப்பட விழா போஸ்டர் வெளியீடு

By

Published : Oct 3, 2019, 8:49 AM IST

சென்னை திரைப்பட விழாவானது வரும் டிசம்பர் 12ஆம் தேதி முதம் 19ஆம் தேதிவரை சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் சார்பில் நடத்தப்பட்டுவரும் இந்த விழாவுக்கான போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, இந்திய திரைப்பட திறனாய்வு கழகத்தின் தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும், திரைப் பிரபலங்களான நடிகர் பார்த்திபன், நடிகை ரோகிணி, இயக்குநர்கள் சங்கச் செயலாளர் ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

உலக சினிமா போட்டியில் பங்குபெறும் தமிழ்ப்படங்கள், குறிப்பிட்ட நாடுகளின் சிறந்த படங்கள், குறிப்பிட்ட இயக்குநர்களின் முந்தைய சாதனை படங்கள் ஆகிய பிரிவுகளில் படங்கள் திரையிடப்படவுள்ளன.

தமிழ்த் திரைப்பட போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ஆறு லட்சம் ரூபாயாகவும் இளம் சாதனையாளர் விருது ஒரு லட்சம் ரூபாயாகவும் வழங்கப்படவுள்ளது.

இந்த விழாவில் திரையிட தேர்வாகும் படங்கள் சென்னையிலுள்ள தேவி, தேவிபாலா, அண்ணா, காசினோவா, ரஷ்யன் கலாசார கழகம் - தாகூர் அரங்கத்தில் திரையிடப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details