நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித்தை வைத்து ஹெச். வினோத் வலிமை படத்தை இயக்கிவருகிறார். இப்படம் குறித்து நீண்ட நாள்களாக எந்தவித அப்டேட்டும் வராமல் இருந்ததால் அஜித் ரசிகர்கள் செல்லும் இடமெல்லாம் யாரைப் பார்த்தாலும் வலிமை அப்டேட் கேட்டுவந்தனர்.
படத்தின் மோஷன், ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
இதனையடுத்து 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த ஜூலை 11ஆம் தேதிவெளியானது.
வலிமை மோஷன் போஸ்டரை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர். மேலும், மோஷன் போஸ்டர் வெளியான சில மணி நேரத்திலேயே ட்விட்டரில் #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.