சாய் தயாரிப்பில் அசோக், சாந்தினி, ஷீலா உள்ளிட்டோர் நடித்து சம்பத்குமார் இயக்கியுள்ள படம் மாயத்திரை. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (ஜனவரி 1) நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை குஷ்பூ, சுஹாசினி, தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி, துணைத்தலைவர் கதிரேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
'திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்' - நடிகை குஷ்பூ - மாயத்திரை படம்
சென்னை: திரையரங்குகளில் 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமிக்கு நடிகை குஷ்பூ கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகை குஷ்பூ
அப்போது பேசிய நடிகை குஷ்பூ, தமிழ்நாட்டில் 100 விழுக்காடு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அதுபோல் திரையரங்குகளில் 100 விழுக்காடு பார்வையாளர்களை அனுமதிக்க உத்தரவிட்டு திரை உலகை வாழ வைக்க வேண்டும் என்றார்.