தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மும்பை 'பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்' போல் தெரிகிறது - கங்கனா ரணாவத் - சிவசேனா எம்பி

மும்பை இப்போது தனக்கு 'பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்' போல் தெரிகிறது என்று நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

கங்கனா
கங்கனா

By

Published : Sep 3, 2020, 7:47 PM IST

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்குப்பின் சமூக வலைதளத்தில் வாரிசு அரசியல் தொடர்பான சர்ச்சை வெடித்துள்ளது. இதனால் நெட்டிசன்கள் பலரும் வாரிசு பிரபலங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் சென்று திட்டித் தீர்த்து வருகின்றனர். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வழக்கை சிபிஐ, அமலாக்க இயக்குநரகம் விசாரித்து வருகின்றன.

சுஷாந்தின் தற்கொலையைத் தொடர்ந்து, பாலிவுட்டில் வாரிசு பிரபலங்கள் குறித்தும் பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியலுக்கு எதிராகவும் கங்கனா ரணாவத் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் பாலிவுட்டில் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதாகவும்கூறி புதிய குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்.

இதற்கிடையில், நெட்டிசன் ஒருவர் கங்கனா உள்ளிட்ட சிலரைப் பெயர் குறிப்பிடாமல் கிண்டல் செய்திருந்தார். அவரின் கருத்துக்கு மும்பை காவல் துறையின் ட்விட்டர் பக்கம் லைக் செய்திருந்தது.
இதைப்பார்த்த கங்கனா, 'பொதுவெளியில் அவதூறாகப் பேசுவதை கண்டிக்காமல், சுஷாந்தின் மரணத்திற்கு எதிராகப் போராடி வருபவர்களை அவதூறாகப் பேசும் கருத்துகளை மும்பை காவல் துறை லைக் செய்துள்ளது.
இதைவிட மோசமான நிலைக்கு மும்பை காவல் துறை இறங்கிவிட முடியாது. என்னை இப்படி வெளிப்படையாக மும்பை காவல் துறை அச்சுறுத்தும் போது, எனக்கு எதிரான அவதூறை ஊக்குவிக்கும்போது, நான் எப்படி மும்பையில் பாதுகாப்புடன் இருக்க முடியும்? என் பாதுகாப்புக்கு யார் காரணம்' எனப் பிரதமரின் ட்விட்டர் பக்கத்தை குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார்.
இதைப்பார்த்த மும்பை காவல் துறையினர், இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய பதில் அளிக்கப்படும் என கங்கனாவிடம் தெரிவித்தனர்.
இதற்கிடையில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் மும்பை காவல் துறை மீது நம்பிக்கை இல்லாவிட்டால் மும்பைக்கு திரும்பி வர வேண்டாம் என வெளிப்படையாக மிரட்டி உள்ளதாக கங்கனா தெரிவித்தார். இவர்களின் இந்த கருத்துகளைப் பார்க்கும்போது மும்பை இப்போது தனக்கு 'பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்' போல் தெரிகிறது என்று கங்கனா தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details