தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பரஸ்பர விவாகரத்து, குழந்தைகளின் கஸ்டடியை கோரப்போவதில்லை... நவாஸுதின் சித்திக் முடிவு? - பாலிவுட் செய்திகள்

நடிகர் நவாஸுதின் சித்திக்கின் மனைவி ஆலியா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து விவாகரத்து கோரி இருந்த நிலையில், விவாகரத்திற்கு நவாஸ் உடன்பட்டுள்ளதாகவும், குழந்தைகளை பாதுகாப்பதில் எவ்வித உரிமையும் கோரப்போவதில்லை என்றும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நவாஸுதின் சித்திக் ஆலியா
நவாஸுதின் சித்திக் ஆலியா

By

Published : May 28, 2020, 10:57 AM IST

சேக்ரட் கேம்ஸ், கேங்ஸ் ஆஃப் வஸேபூர், தலாஷ், மாண்டோ, லன்ச் பாக்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள், இணையத் தொடர்கள் மூலம் தன் தனித்துவ நடிப்பால் சிறந்து விளங்கி, உலக திரைப்பட ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக்.

பாலிவுட் தாண்டி, தமிழிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக ’பேட்ட’படத்தில் நடித்து தனி முத்திரையைப் பதித்துள்ள நவாஸுதினின் மீது, அவரது மனைவி ஆலியா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து விவாகரத்து கோரி சில நாள்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

மேலும், ”குடும்பம், குழந்தைகள் மீதும் நவாஸ் போதிய கவனம் செலுத்தவில்லை. என் குழந்தைகளுக்கு கடைசியாக தன் தந்தையை எப்போது பார்த்தார்கள் என்பதுகூட மறந்துவிட்டது. என் குழந்தைகள் என்னுடைய பாதுகாப்பில் மட்டுமே இருக்க அனுமதி வழங்குமாறு கேட்டுள்ளேன்” என்றும் ஆலியா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் நவாஸுதின் சித்திக் இந்த விவாகரத்திற்கு உடன்பட்டுள்ளதாகவும், குழந்தைகளை பாதுகாப்பதில் எவ்வித உரிமையும் கோரப்போவதில்லை என்றும், அவரது நெருங்கிய வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளிவருகின்றன.

மேலும், இந்த நேரத்தில் என்ன பேசினாலும் அது நவாஸுதினுக்கு எதிராகவே திரும்பும் என்றும், விரைவில் இந்த பிரச்னைகளைத் தீர்த்து தன் வாழ்வில் அடுத்தகட்டத்திற்கு நவாஸ் செல்வார் என்றும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க :என்னை காதலியுடன் சேர்த்து வையுங்கள் சோனு...கோரிக்கை வைத்த ரசிகர்!

ABOUT THE AUTHOR

...view details