பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா சமீபத்தில் நடைபெற்ற 62ஆவது கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அந்த நிகழ்கிக்கு வெள்ளை நிறத்தில், மிகவும் கவர்ச்சியாக உடையணிந்து சென்றுள்ளார். அந்த உடை மிகவும் மோசமாக இருந்தது என்று கோலிவுட் ரசிகர்கள் பலரும் பிரியங்காவை திட்டித் தீர்த்தனர். அந்த உடை ஏற்கனவே ஜெனிபர் லோபஸ் என்பவர் அணிந்திருந்தார் எனவும் விமர்சிக்கப்பட்டது.
பிரியங்கா சோப்ராவின் ஆடையை விமர்சித்து, பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் வென்டெல் ரோட்ரிக்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். ஆனால், அவரின் பதிவு சர்ச்சைக்கு உள்ளானதையடுத்து உடனே அதனை நீக்கிவிட்டார்.