தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

லயனும் டைகரும் சேர்ந்ததுதான் ‘லைகர்’ - விஜய் தேவரகொண்டா படத்துக்கு இப்படி ஒரு டைட்டில்! - பூரி ஜனநாத்

முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக உருவாகிவரும் இதற்காக விஜய் தேவரகொண்டா தாய்லாந்து சென்று தற்காப்புக் கலை பயிற்சி எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

விஜய் தேவரகொண்டா
Vijay Deverakonda pan-India film with Ananya Panday gets title

By

Published : Jan 18, 2021, 4:04 PM IST

ஹைதராபாத்: பூரி ஜகநாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனான்யா பாண்டே ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் திரைப்படத்துக்கு ‘லைகர்’ என பெயரிடப்பட்டுள்ளது.

தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்த பூரி ஜகநாத், முதன்முறையாக விஜய தேவரகொண்டாவுடன் இணைந்துள்ளார். கரண் ஜோகர் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக அனான்யா பாண்டே நடிக்கிறார். நேற்று இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Vijay Deverakonda pan-India film with Ananya Panday gets title

அதன்படி இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியானது. லைகர் என இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது.

முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக உருவாகிவரும் இதற்காக விஜய் தேவரகொண்டா தாய்லாந்து சென்று தற்காப்புக் கலை பயிற்சி எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Vijay Deverakonda pan-India film with Ananya Panday gets title

ABOUT THE AUTHOR

...view details