தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

‘துப்பாக்கி’ பட வில்லனின் 'குதா ஹாஃபிஸ்' - லக்னோவில் படப்பிடிப்பு - பில்லா 2 பட வில்லன் வித்யுத்

'துப்பாக்கி' பட வில்லன் நடிகர் வித்யுத் ஜம்வால் நடிக்கும் 'குதா ஹாஃபிஸ்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் லக்னோவில் நடைபெற்றுவருகிறது.

Vidyut Jammwal
Vidyut Jammwal

By

Published : Jan 25, 2020, 9:25 AM IST

தமிழில் 'பில்லா 2', 'துப்பாக்கி', 'அஞ்சான்' ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சியமானவர் நடிகர் வித்யுத் ஜம்வால்.

'கமாண்டோ', 'கமாண்டோ 2', 'கமாண்டோ 3', 'ஜங்கிள்' ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ள வித்யுத் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம்வருகிறார்.

இதனிடையே பாலிவுட் இயக்குநர் ஃபரூக் கபீர் இயக்கும் 'குதா ஹாஃபிஸ்' என்ற படத்தில் வித்யுத் நடித்துவருகிறார். இவருக்கு ஜோடியாக ஷிவலீகா ஓபராய் நடிக்கிறார்.

ரொமாண்டிக் ஆக்ஷன் திரில்லராக உருவாகிவரும் இந்தப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு பணிகள் கடந்த அக்டோபர் மாதம் உஸ்பெஸ்கிஸ்தானில் தொடங்கியது. தற்போது இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் மும்பை மற்றும் லக்னோவில் நடைபெற்று வருகின்றன. மேலும், அடுத்தகட்ட படப்பிடிப்பு இமாச்சலப் பிரதேச மாநிலம் மணாலியில் நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

வித்யுத் ஜம்வால் நடிக்கும் 'குதா ஹாஃபிஸ்'

இறுதிகட்டப்பணிகள் அடுத்த மாத இறுதியில் நிறைவடையும் என்றும் படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப்படத்தை குமார் மங்கட் பதக், அபிஷேக் பதக், சஞ்சீவ் ஜோஷி, ஆதித்யா சவுக்சே மற்றும் முரளிதர் சத்வாணி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். பானரோமா பிலிம்ஸ் மற்றும் ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் வெளியிடுகின்றன.

இதுகுறித்து பேசிய நடிகர் வித்யுத் ஜம்வால், 'குதா ஹாஃபிஸ்' படத்தின் திரைக்கதையை முதன்முறையாகக் கேட்டபோதே எனக்குப் பிடித்துப் போய்விட்டது. உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற முதற்கட்டப் படப்பிடிப்பு மிகுந்த உற்சாகமாக இருந்தது. இதற்கு முன்பு நான் நடித்த படங்களில் இருந்து இந்தப்படத்தில் எனது கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்ட வகையில் இருக்கும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க...'பிங்க்' தெலுங்கு ரீமேக்கின் புதிய அப்டேட்!

ABOUT THE AUTHOR

...view details