தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வருண் தவானின் அசத்தல் நடனம் வைரலானது! - Bollywood news

பாலிவுட் நடிகர் வருண் தவான், படப்பிடிப்புத்தளத்திலிருந்து நளினமான பெண் அசைவுளோடு நடனமாடி தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

Actor Varun Dhawan

By

Published : Nov 7, 2019, 2:47 PM IST

தன் ஏராளமான ரசிகர்களை குதூகலப்படுத்தும் விதமாக பாலிவுட் நடிகர் வருண் தவான், விரைவில் வெளிவரவிருக்கும் தன் கூலி நம்பர் 1 திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திலிருந்து நடன வீடியோ ஒன்றை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கூலி நம்பர் 1 திரைப்படத்தின் பாடல் ஒன்றுக்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது, தன் வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்டு, மிக நளினமான பெண் அசைவுளோடு நடனமாடி அவர் படப்பிடிப்புத் தளத்திலிருந்தோரை மகிழ்வூட்டும் இந்த வீடியோ, அவரது ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.

varun Dhawan dancing at sets of Coolie No 1

மேலும், வருண் தவானின் இந்த வீடியோ பதிவிற்கு, அவரின் 'மெய்ன் தேரா ஹீரோ' திரைப்படத்தில் உடன் நடித்த நடிகைகள் இலியானா டி க்ரஸ், நர்கீஸ் ஃபக்ரீ இருவரும், எமோஜிக்களுடன் அழகான பின்னூட்டங்களிட்டு அவரை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

1995 ஆம் ஆண்டு வெளியான கூலி நம்பர் 1 திரைப்படம், 90களின் பிரபல நடிகர் கோவிந்தாவும், நடிகை கரிஷ்மா கபூரும் இணைந்து நடித்த திரைப்படத்தின் ரீமேக் என்பதும், இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு மே ஒன்றாம் தேதி திரைக்கு வரவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

'இந்தியன் 2' செட்டில் பாபி சிம்ஹா பிறந்தநாள் கொண்டாட்டம்

ABOUT THE AUTHOR

...view details