தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மாஸ்க் அணிந்த வருண் தவான் பட போஸ்டர் : ரசிகர்கள் உற்சாகம்! - கூலி நம்பர் 1 போஸ்டர்

வருண் தவான் முகக்கவசம் அணிந்திருக்கும்படியான கூலி நம்பர் 1 திரைப்படத்தின் போஸ்டர் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டது.

மாஸ்க் அணிந்த வருண் தவான் பட போஸ்டர்
மாஸ்க் அணிந்த வருண் தவான் பட போஸ்டர்

By

Published : Jun 12, 2020, 3:06 AM IST

90களின் பிரபல நடிகர் கோவிந்தா, நடிகை கரிஷ்மா கபூர் ஆகியோரது நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கூலி நம்பர் 1. வணிக ரீதியாக பெரும் வெற்றியடைந்த இந்தத் திரைப்படத்தின் ரீமேக்கில் தற்போது நடிகர் வருண் தவானும், நடிகை சாரா அலி கானும் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்தத் திரைப்படம் முன்னதாக இந்த ஆண்டு மே ஒன்றாம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், பட வெளியீடு தள்ளிப்போனது.

இந்நிலையில் நடிகர் வருண் தவான் முகக்கவசம் அணிந்திருக்கும் வகையிலான கூலி நம்பர் 1 பட போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வருண் தவான் இந்த போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கரோனா பெருந்தொற்றின் நடுவே திரையரங்குகளுக்கு செல்ல முடியாமல் வீடுகளில் அடைந்துள்ள ஏராளமான பாலிவுட் ரசிகர்களை இந்த போஸ்டர் உற்சாகப்படுத்தியுள்ளது.

மேலும், முகக்கவசம் அணிந்த போஸ்டர் வெளியாகியுள்ளதால், படத்தில் கரோனா குறித்த காட்சிகள் வருகின்றனவா என்றும், படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படுமா என்றும் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க :வருண் தவானின் அசத்தல் நடனம் வைரலானது!

ABOUT THE AUTHOR

...view details