தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பெல் பாட்டம்' கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று - வாணி கபூர் - வாணி கபூரின் திரைப்படங்கள்

மும்பை: அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் 'பெல் பாட்டம்' திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் எண்பதுகளின் காலகட்டத்தை சித்தரிக்கும் தோற்றத்தை கொண்டுள்ளதாக நடிகை வாணி கபூர் தெரிவித்துள்ளார்.

வாணி கபூர்
வாணி கபூர்

By

Published : Aug 29, 2020, 4:26 PM IST

பாலிவுட்டில் தற்போது எதிர்பார்ப்பில் இருக்கும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் 'பெல் பாட்டம்'. அக்ஷய் குமார் நடிக்கும் இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை வாணி கபூர் நடிக்கிறார்.

1980களில் நடக்கும் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாகிவருகிறது. ரஞ்சித் எம்.தேவாரி இயக்கும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வாணி கபூர் இப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து கூறியுள்ளார், ” இந்த படத்தில் என் கதாபாத்திரத்தின் தோற்றம் எண்பதுகளின் காலகட்டத்தை சித்தரிக்கும்.

இப்படத்தில் எனது கதாபாத்திரம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும். அதுமட்டுமல்லாது என் திரை வாழ்வில் இந்த கதாபாத்திரம் முக்கியமான சகாப்தம். பொதுவாக எனக்கு 80 காலகட்டம் மிகவும் பிடித்தமான ஒன்று. அது ஒரு வண்ணமயமான அழகான காலகட்டம். அந்தக் காலகட்டத்தில் இந்த படம் அமைவது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
இப்படத்திற்காக நான் 80களில் வெளியான திரைப்படங்களை பார்த்து அப்போது அவர்கள் பேசிய விதம், பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை உள்ளிட்டவைகளை தற்போது பயிற்சி செய்துவருகிறேன்” என்று கூறினார்.
அக்‌ஷய் குமாரின் பெல் பாட்டம் படத்தைத் தவிர்த்து, ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக பெயரிடப்படாத ஒரு காதல் படம், ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ஷம்ஷெரா உள்ளிட்ட படங்களுக்கும்வாணி கபூர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details