மும்பை : 1989-90களில் ஜம்மு காஷ்மீரில் பண்டிட்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை குறித்து எடுக்கப்பட்ட படம் தி காஷ்மீர் ஃபைல்ஸ். இந்தப் படம் வெறுப்பை உமிழ்கிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் : இதற்கிடையில் படத்தை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என சில எம்.பி.க்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வெளியான மார்ச் 11ஆம் தேதி முதல் தற்போதுவரை மிகப்பெரிய அளவிலான வசூல் வெற்றியை குவித்துவருகிறது.
முதல் நாளிலே ரூ.3.55 கோடி வசூலித்த தி காஷ்மீர் ஃபைல்ஸ், இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைக்குள் ரூ.167.45 கோடி வசூலித்து சாதனை புரிந்தது. இந்த நிலையில் அடுத்த தினங்களில் முறையே ரூ.12.40 (திங்கள்கிழமை), செவ்வாய்க்கிழமை ரூ.10.25 கோடி, புதன்கிழமை (மார்ச் 23) ரூ.10.03 கோடி என இதுவரை ரூ.200 கோடி வசூலித்துள்ளது.