நடிகை டாப்சி சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் நிறைந்த கதைகளைத் தேர்வு செய்து நடித்துவருகிறார். அந்த வகையில் 'முல்க்' திரைப்படத்தைத் தொடர்ந்து அனுபவ் சின்ஹா இயக்கத்தில் அவர் நடித்துள்ள படம் 'தப்பட்'. பூஷன்குமார், கிரிஷன் குமார், அனுபவ் சின்ஹா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படம் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியானது.
'தப்பட்' படத்தின் இரண்டுநாள் வசூலை வெளியிட்ட படக்குழு! - டாப்சியின் தப்பட் படம்
டாப்சி நடிப்பில் வெளியான 'தப்பட்' படத்தின் இரண்டு நாள் வசூலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
திருமண உறவில் துணைவர் நிகழ்த்தும் வன்முறைகள் குறித்து பேசும் இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர், டாப்ஸியின் கணவர் அவரை அறையும் காட்சிகளும், அதைத் தொடர்ந்து பார்வையாளர்களுடன் டாப்ஸி உரையாடுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இரண்டு நாட்கள் படத்தின் வசூலை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, முதல் நாள் 3.07 கோடி ரூபாயும், இரண்டாம் நாள் 5.05 கோடி ரூபாயும் வசூல் செய்து மொத்தம் 8.12 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக அறிவித்துள்ளது.