பிக் பி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமித்தாப் பச்சன். பாலிவுட்டையே ஆட்சி செய்த இவர், வயதானாலும் கதாநாயகிகளுடன் டூயட் ஆடும் மற்ற ஹீரோக்கள் போல் இல்லாமல் வயதுக்கேற்ற கதைகளைத் தேர்வு செய்பவர்.
எமோசனல் ஆன பிக் பி! காரணம் என்ன? - twitter
மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் அப்பா - மகள் பந்தத்தை விளக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமிதாப் பச்சன்
இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் காது கேளாத மகளுக்கு திருமண நாளன்று தந்தை பாடும் பாடலின் வீடியோ அது. தனது மகளுக்கும் புரிய வேண்டும் என்பதற்காகச் சைகை மொழியிலும் பாடும் அந்த பாடலைக் கேட்டு கண்கலங்குபவர்கள் அங்கிருப்பவர்கள் மட்டுமல்ல நாமும் தான்.