தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'நானா படேகர் உண்மையை ஒப்புக்கொள்ளும் வரை ஓயமாட்டேன்' -  தனுஸ்ரீ வார்னிங் - நானா படேகர் மீது தனுஸ்ரீ  தத்தா பாலியல் துன்புறுத்தல் வழக்கு

மும்பை: எனது சினிமா வாழ்க்கையை இழந்துவிட்டேன். இனிமேலும் எனக்கு எந்த பயமும் இல்லை. நானா படேகர் உண்மையை ஒப்புக்கொள்ளும் வரை போராட்டத்தைத் தொடர்வேன் என்று காட்டமாக பேட்டியளித்துள்ளார் நடிகை தனுஸ்ரீ தத்தா.

Tanushree Dutta sexual harassment case
Tanushree Dutta warns Nana Patekar

By

Published : Jan 8, 2020, 7:30 PM IST

' நானா படேகர் உண்மையை ஒப்புக்கொள்ளும் வரை, எனது போராட்டம் ஓயாது ' என்று அவர் மீது பாலியல் துன்புறுத்தல் புகாரை நடிகை தனுஸ்ரீ தத்தா கூறினார்.

இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் தனுஸ்ரீ தத்தா கூறியதாவது:

' நடிப்பு மீது மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்த நான் பெரிய நடிகையாக வேண்டும் என நினைத்தேன். ஏற்கெனவே எனது சினிமா வாழ்க்கை பறிபோய்விட்டது. இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை. அதனால் எந்த பயமும் இல்லை.

இந்த விவகாரத்தில் நானா படேகர் உண்மையை ஒப்புக்கொள்ளும் வரை ஓயமாட்டேன். அதுவரை எனது போராட்டம் தொடரும் ' என்றார்.

ஃபெமினா மிஸ் இந்தியா விருது வென்ற தனுஸ்ரீ தத்தா பாலிவுட், கோலிவுட், டோலிவுட் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பதாகக் கூறி #MeToo என்ற ஹேஷ்டேக்கில் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்த வேளையில், பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நானா படேகர், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தனுஸ்ரீ தத்தா தெரிவித்தார்.

சினிமா ஷுட்டிங் தளத்தில் வைத்து நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகத் தெரிவித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்திய நிலையில், நடிகருக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்தனர்.

Tanushree Dutta warns Nana Patekar

இதற்கு மறுப்பு தெரிவித்த தனுஸ்ரீ, இந்த விவகாரத்தை, சட்ட ரீதியாக தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறார். தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றுள்ள நிலையில், நானா படேகர் உண்மையை ஒப்புக்கொண்டு சரணடைய வேண்டும் என்று தனுஸ்ரீ வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:

பயத்தில் உறைய வைக்க மீண்டும் வருகிறது 'ஈவில் டெட்'

ABOUT THE AUTHOR

...view details