தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

காத்திருந்து சதித்திட்டம் தீட்டி ஹிருத்திக்குடன் இணைந்து நடிப்பேன் - டாப்ஸி பண்ணு நம்பிக்கை - பாலிவுட் செய்திகள்

ஹிருத்திக் ரோஷனின் மிகப்பெரும் விசிறியாகிய தான், பொறுமையாக சதித்தீட்டம் திட்டி அவருடன் விரைவில் இணைந்து நடிப்பேன் என பிரபல நடிகை டாப்ஸி பண்ணு நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

டாப்ஸி பண்ணு ஹிருத்திக் ரோஷன்
டாப்ஸி பண்ணு ஹிருத்திக் ரோஷன்

By

Published : Feb 26, 2020, 6:55 PM IST

பாலிவுட்டின் கிரேக்கக் கடவுள் என ரசிகர்கள் பலராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் ஹிருத்திக் ரோஷன். பாலிவுட் திரையுலகில் உள்ள நடிகர் நடிகையர் பலருமே ஹிருத்திக்கின் ரசிகர்களாக விளங்கிவரும் நிலையில், பிரபல நடிகை டாப்ஸி பண்ணு தான் ஒரு தீவிர ஹிருத்திக் ரோஷனின் விசிறி எனப் பல மேடைகளிலும் தொடர்ந்து கூறிவருகிறார்.

சமீபத்திய பிறந்தநாள் விழா ஒன்றில் தன் விருப்ப நடிகரான ஹிருத்திக் ரோஷனை டாப்ஸி நேரில் சந்தித்துள்ளார். இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள டாப்ஸி, ”நான் ஹிருத்திக்குடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்பி அவரை அணுகினேன்.

ஆனால் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்வதற்குப் பதில் பொறுமையாகச் சதித்திட்டம் தீட்டி விரைவில் அவருடன் படத்தில் இணைந்து மகிழ்ச்சியாக செல்ஃபி எடுத்துக்கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தன் பிற முன்மாதிரி மனிதர்களைப் பற்றியும் பேசிய டாப்ஸி, தனது நாட்டிற்காக விளையாடும் விளையாட்டு வீரர்களை மிகவும் ரசிப்பதாகவும், அவர்கள்தான் நாட்டின் உண்மையான ஹீரோக்கள் என்றும் கூறியுள்ளார்.

டாப்ஸி பண்ணு ஹிருத்திக் ரோஷன்

டாப்ஸி நடிப்பில் தப்பட் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவரவுள்ள நிலையில், சமீபத்தில் தனக்கு கிடைத்துவரும் வெற்றிதான் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வுசெய்து தான் நடிப்பதற்கு உத்வேகம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தப்பட் திரைப்படம் வருகிற 28ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில், பிரபல கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான சபாஷ் மித்து, ஹசீன் தில்ருபா, லூப் லபெடா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'மூளையில்லாத குரங்குகள்' - பாக். பேராசிரியரை சாடிய ஹிருத்திக்ரோஷன்

ABOUT THE AUTHOR

...view details