தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சுஷாந்த் தற்கொலை: 9 மணி நேரம் ரியாவிடம் விசாரணை செய்த காவல் துறை - சுஷாந்த் காதலி

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து அவரது காதலி ரியாவிடம் ஒன்பது மணி நேரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

ரியா
ரியா

By

Published : Jun 19, 2020, 3:16 PM IST

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரது மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கான காரணத்தை அறிய அவரது காதலி ரியாவிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது ரியாவின் தொலைபேசி முழுவதும் ஸ்கேன் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ரியா பேசுகையில், "நானும், சுஷாந்தும் ஒன்றாக வீடு வாங்க முயற்சித்தோம். 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தோம்.

ஆனால் இடையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டோம். அப்போது இருவரும் மெசேஜில் பேசிய உரையாடலை காவல் துறையினரிடம் காண்பித்துள்ளேன்.

அவர் மன அழுத்தத்தில் இருப்பதை உணர்ந்து, நான் அவரது சகோதரியிடம் அவரைப் பார்த்துக் கொள்ளுங்கள்'' என அறிவுறுத்தினேன்.

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக ரியாவின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் சுஷாந்த் அழைப்பை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details