நியூசிலாந்தில் வெளியாகியுள்ள சுஷாந்தின் 'தில் பேச்சாரா' - சுஷாந்த் சிங் ராஜ்புத்
மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான 'தில் பேச்சாரா' நியூசிலாந்தின் பிஜி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
மறைந்த பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் கடைசியாக உருவான படம் 'தில் பேச்சாரா'. முகேஷ் சோப்ரா இயக்கியுள்ள இப்படம் 'தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்' என்னும் பிரபல ஆங்கில நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சுஷாந்த் சிங்குக்கு ஜோடியாக சஞ்சனா நடித்துள்ளார். இதற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், ஜூலை 24ஆம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.