'தோனி' பட நாயகன் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மன அழுத்தம் காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுவது ரசிகர்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
நேற்று (ஜூன் 18) அவரது சொந்த ஊரான பாட்னாவில் சுஷாந்த் சிங்கின் அஸ்தி கரைக்கப்பட்டது. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார் என ஒரு பக்கம் செய்திகள் வெளியானாலும், மறு பக்கம் பாலிவுட் திரைத்துறையில் நடக்கும் அரசியலே இதற்குக் காரணம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் பிரிவைத் தாங்க முடியாமல் அவர் வளர்த்த செல்ல நாயான ’ஃபட்ஜ்’ அவரது புகைப்படங்களுக்கு முன் சோகத்துடன் படுத்துக் கிடக்கும் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
சுஷாந்த் சிங் நினைவில் வாடும் வளர்ப்பு நாய் ஃபட்ஜ் - நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்! - நடிகர் சுஷாந்த் சிங் மரணம்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் வளர்ப்பு நாயான ’ஃபட்ஜ்’ அவரை நினைத்து சோகமாக படுத்து கிடக்கும் புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
ஃபட்ஜ் உடன் சுஷாந்த் சிங்
இதையும் படிங்க :'யசோதா' குறும்பட டீசரை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்!