தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அடுத்து 'லைலா சன்னி ' - ஆடப்போவது எங்கயா இருக்கும்...?

சன்னி லியோன் 'லைலா' பாடலுக்கு நடனமாடும் வீடியோவை பதிவிட்ட சில மணிநேரத்திலே ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதை வைரலாக்கியுள்ளனர்.

Sunny Leone

By

Published : Nov 8, 2019, 9:59 PM IST

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சன்னி லியோனுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர் தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். தற்போது வீரமாதேவி படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூகுளில் அதிகம் தேடப்படுவோர் பட்டியலில் மோடி, ஷாருக்கானை பின்னுக்குத் தள்ளி சன்னி முதலிடத்தை பிடித்திருப்பதாக அறிக்கை ஒன்று வெளியானது. மேலும் சன்னி லியோன் வெறும் நடிகையாக மட்டுமல்லாது, தொழில் முனைவோர், சமூக சேவகி உள்ளிட்ட பன்முக தன்மையை கொண்டுள்ளார்.

பாலிவுட் சினிமாக்கள், டிவி ஷோக்கள் என பிஸியாக உள்ள சன்னி லியோன் தற்போது வெளிநாடுகளில் அவ்வப்போது நடன நிகழ்ச்சியில் பங்கேற்றும் வருகிறார். தற்போது அவர் பாலிவுட்டில் பிரபலமான 'லைலா ஓ லைலா' பாட்டிற்கு நடன பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அடுத்ததாக லைலா நடனமாட போகும் நிகழ்ச்சி எதுவென்று தெரியுமா என பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details