தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சுஷாந்த் சிங் மரணம்: சுப்பிரமணியன் சுவாமி புதிய கேள்வி - சுஷாந்த் தற்கொலைக்கு விளக்கமளித்த சுப்ரமணியன் சுவாமி

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி புதிய கேள்வியை எழுப்பியுள்ளார்.

சுஷாந்த் தற்கொலைக்கு விளக்கமளித்த சுப்ரமணியன் சுவாமி
சுஷாந்த் தற்கொலைக்கு விளக்கமளித்த சுப்ரமணியன் சுவாமி

By

Published : Jul 31, 2020, 9:45 PM IST

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை தொடர்பான விசாரணையில் காவல்துறையினர் ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி ட்விட் செய்துள்ளார்.

மேலும் சுஷாந்தின் உடல் கூறாய்வு அறிக்கை ஏன் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது என்றும் அவர் கேள்வியெழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஏன் சுஷாந்த் சிங் ராஜ்புட் வழக்கில் மும்பை காவல்துறை ஏன் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை? ஏன் உடற் கூறாய்வு பரிசோதனையில் தற்காலிமானது என்று பெயரிடப்பட்டுள்ளது?

இரண்டுக்கும் ஒரே காரணம்தான். சுஷாந்தின் உடல் உறுப்புகள் குறித்த அறிக்கையை தடயவியல் துறை கொடுப்பதற்காக மருத்துவமனை மருத்துவர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் சுஷாந்திற்கு விஷம் உண்டிருக்கலாம். ஆகவே, சோதனைக்காக அவரது நகங்களும் கொடுக்கப்பட்டுள்ளன" என தெரிவித்துள்ளார்.

முந்தைய ட்விட்டில் சுப்பிரமணியன் சுவாமி, நடிகர் சுஷாந்த கொலை செய்யப்பட்டதாகவே கருதுவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...'நான் ஏன் சுஷாந்த் சிங் படுகொலை செய்யப்பட்டதாக நினைக்கிறேன்?' - சுப்பிரமணியன் சுவாமி!

ABOUT THE AUTHOR

...view details