மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம் மற்றும் சினிமாத்துறையில் போதைப் பொருள் நடமாட்டம் தொடர்பாக நடிகை ரியா சக்கரபோர்த்தி உள்ளிட்ட 25 திரைபிரபலங்களிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தவுள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து வெளியான தகவலின்படி, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தை மூடி மறைத்ததாகக் கூறப்படும் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தியபோது ரியா சிலரின் பெயரை கூறியுள்ளார்.
இதனடிப்படையில், ரியாவைத் தவிர, தீபேஷ் சாவந்த் மற்றும் சாமுவேல் மிராண்டா உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பபட உள்ளது. இவர்களுக்கு போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் சம்மன் அனுப்பவும் வாய்ப்புள்ளது.
சுஷாந்த் சிங் தற்கொலை மற்றும் போதைப் பொருள் வழக்கில் நடிகை ரியாவிடம் ஏற்கனவே பலமணி நேரம் காவலர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையில் நடிகை ரியா, சுஷாந்தின் சகோதரி பிரியங்கா சிங் மீது மும்பை பாந்த்ரா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க:'சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டார்'- பாஜக தலைவர் பேச்சு