தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அரசியலில் நுழைகிறாரா நடிகர் ஷாருக் கான் ? - பிரசாந்த் கிஷோருடன் சந்திப்பு

மும்பை: தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் பாலிவுட் நடிகர் ஷாருக் கானும் சமீபத்தில் சந்தித்துள்ளனர்.

shahrukh
shahrukh

By

Published : Jun 12, 2021, 10:49 PM IST

சட்டப்பேரவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் திருணாமூல், தமிழ்நாட்டில் திமுக ஆகிய கட்சிகளுக்காக தேர்தல் ஆலோசர் பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனம் பணியாற்றிவந்தது. தேர்தலுக்கு பின் பிரசாந்த் கிஷோர் ஐ பேக் நிறுவனத்திலிருந்து விலகினார்.

இந்த நிலையில் பிரசாந்த் கிஷோரும் பாலிவுட் நடிகர் ஷாருக் கானும் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்த சந்திப்பையடுத்து ஷாருக் கான் அரசியல் நுழைய இருப்பதாகவும் அதற்காக தான் பிரசாந்த் கிஷோரை அவர் சந்தித்து ஆலோசனை பெற்றதாகவும் ஒரு புறம் செய்திகள் வெளியானது.

மற்றொரு புறம் பிரசாந்த் கிஷோரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு படம் உருவாக இருப்பதாகவும் அந்த படத்தை ஷாருக் கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் தயாரிக்க இருப்பதற்காகவும் அதற்கவே ஷாருக் கான் பிரசாந்த் கிஷோரை சந்தித்தாகவும் செய்திகள் வெளியாகின.

ஷாருக்கான் அரசியல் நுழைகிறார் என்பது முற்றிலும் வதந்தி. இருவரும் மரியாதை நிமித்தமாக மட்டுமே சந்தித்து கொண்டனர். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஷாருக் கானை பிராசந்த் கிஷோரை அறிமுகப்படுத்தியதையடுத்து இருவரும் தற்போது சந்தித்துள்ளதாக ஷாருக் கானின் நண்பர்கள் வட்டாரம் தெரிவிகின்றன.

ABOUT THE AUTHOR

...view details