தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மூன்று மாதங்களுக்கு ரியாவின் சகோதரருக்கு பிணை! - சுஷாந்த் சிங் மரணம்

மும்பை: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரியாவின் சகோதருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் பிணை (ஜாமீன்) வழங்கியுள்ளது.

Showik
Showik

By

Published : Dec 2, 2020, 6:59 PM IST

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி போதைப்பொருள் வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக் சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டனர்.

மேலும், பாலிவுட்டில் பலர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து நடிகை ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தி ஆகியோர் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போதைப்பொருள் தடுப்பு முகமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

இதில் ரியாவுக்கு அக்டோபர் 7ஆம் தேதி ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் ஷோயிக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. இதனையடுத்து ஷோயிக் தரப்பு வழக்கறிஞர்கள் நவம்பர் மாதம் அவருக்கு ஜாமீன் வழங்க கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில், இன்று சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

ABOUT THE AUTHOR

...view details